பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

என்று தொடர்ந்து, முடிவிலாக் கோடையை எண்ணும் கவி நிஜனவுச் சுவடுகள் ஆகவும். விலகிய கனவுகள் ஆகவும் போய்விட்ட இனிய அனுபவங்களையும் புதிய சுவைகளையும் கூறுகிருர். இறுதியாக, -

குளிர்பனிக் காலம் கடைசிப் பருவம் நரை திரை மண்டும் நோவுகள் மலியும் உயிர்ப் போராட்டம். வாழ்வில் இனிமேல் வசந்தம் இல்லே என்று முடிவு கட்டுகிருர்,

சஞானரதம் இதழ் ஒன்றில் அக்கினிபுத்திரன் எழுதி யுள்ள பொற்காலப் பொய்கள் சிந்தனை நிறைந்தது: சிந்திக்கத் தூண்டுவது .

'சங்ககாலம் பொற்காலம்; சங்க இலக்கியம் சொல்கிறது: என்று பெருமை பேசுகிறவர்கள் கூற்றில் உண்மை உண்டா?

முப்பூ! முக்கணி! - - - முக்கொடி மூவாசை - முந்நாடு கொண்டு மூவேந்தரெல்லாம் இமயக் கூந்தலில் கொடிப் பூச்சூட்டி நீதிகள் துலங்க நியதிகள் நிலைக்கவும் ஆண்டனராம்! அரசாண்டனராம்!

அக் காலத்தில் நிலவியதாகச் சொல்லப்படும்

பெருமைகள் பலவற்றையும் அடுக்கிச் செல்லும் கவிதை

தொடர்ந்து சங்கப் பாடல்கள் காட்டும் காலநிலைமைகளைக்

கூறுகிறது. . .

குறிஞ்சி முல்லை திணைப் பொருளாம் மலேயும் காடும் அதன் இடமாம். கறுப்பிருட்டும் பனிக்குளிரும் மேகபயங்களும்...குகைகளில் ஒடுங்கலும் அவற்றின் சுழலாம்: . . . இலை தழை உடுத்தும் ஆடைகளாம்!