பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

என்று தங்கள் வெளியீடு பற்றி, பெருமையோடும் மகிழ்ச்சியோடும் விளம்பரம் செய்துள்ளார்கள் இக் கவிஞர்கள்.

"இத்த இயக்கம் திடீரென ஆகாயத்திலிருந்து பொன் இாஞ்சலாடிக்கொண்டு வந்ததல்ல. "வானம்பாடி 1971ல் தோன்றியது. கோவையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இலக்கிய அமைப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறியீடாக வானம்பாடி சிறகடிக்கத் தொடங்கியது. வானம்பாடிக் கூட்டங்கள் மாதத் தோறும் கடந்தன. பின், வானம்பாடி-விஜலயிலாக் கவிமடல் வெளி யிடும் பொறுப்பை ஏற்றனர் இந்த இதழுக்கு ஏற்பட்ட சமூக அங்கீகாரம் இலக்கிய இயக்கமாகச் செயல்பட ஏற்ற தோர் சூழலேத் தோற்றுவித்தது.

மாதந் தோறும் இலக்கியப் பிரச்னைகள் பற்றி தவருமல் ஆய்வரங்குகள் நடைபெற்றன. தமிழ்க்கவிதை அந்தரத்தில் திரிசங்காய் இருப்பது சரியல்ல. துரிதகதியில் மாறிவரும் உலகச் சூழலின் சூழலில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கலாசார, அரசியல், பொருளா தாரப் பிரச்னைகளைப் பற்றி இவ்வியக்கம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், தன் காலடியை முன்வைக்கக் கூடாது. அதுவும், யுகத்தின் மீது சுவடுகள் பதிக்க விரும்பும் வானம் பாடிகள் இதைத் தம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம். பிறமொழி இலக்கிய அறிமுகம் தம்மை வளர்க்கும். இவை தவிர, தன்னைத் தான் சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் தான் வளர இயலாது.

இந்த அடிப்படைகளின் மேல் வானம்பாடி இதழின் கட்டுமானங்கள் நடந்தன. ஆய்வரங்குகளில் கவிதைப் படையல்களும், விமர்சனங்களும் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கலே இலக்கிய கருத்தோட்டங்கள் பற்றி விவாதிக் கப்பட்டன. வானம்பாடிகளின் வரலாற்றில் இது முதல் போக அறுவடையின் காலம் மரபிலிருந்து புதிய மரபிற்கு பலர் தவழ்ந்து வந்ததும், சிலர் தாவி வந்ததும் கலக்