பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

களின் இயக்கம் இது. முற்போக்குச் சிந்தனே உடைய அனேவரையும் ஏற்றுக்கொள்ளும் இயக்க: இது”. இவ்வாறு வானம்பாடிக் கவிஞர்கள் அறிவித்திருக்கிருர்கள். ஆகவே, வானம் பாடி இதழில் கோவை வட்டாரத்துக் கவிஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மனிதாபிமான முற்போக்குக் கவிஞர்கள் பலரும் கவிதைகள் எழுதியிருக்கிருச்கள். பெயர் பெற்ற கவிஞர்களோடு, ஆற்றலால், ஆர்வத்தால், உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர்களும், புதிதாக எழுத முன்வந்த உற்சாகி களும் தங்கள் படைப்புகளை வானம்பாடியில் வெளியிட் டுள்ளனர். இதர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதிய அநேகர் வானம்பாடியிலும் எழுதியிருக்கிருச்கள்.

புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கிணிபுத்திரன், சக்திக்கனல், (ք. மேத்தா, ரவீந்திரன். தமிழன்பன், ஞானி, பா. ஜெயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா கோ, ராஜாாாம் என்று பெரிதாக வளரும் பட்டியலைக் கொண்டது வானம்பாடி இயக்கம், இவர்களது படைப்புக் களில், சிற்பியின் கவிதைகள் கற்பனைவளம், கலைநயம், கவிதா வேகம், உணர்வு ஒட்டம் கொண்டு சிறந்து விளங்கு கின்றன. இவரது "கிகரங்கள் பொடியாகும்: கவிதை பற்றி தன் முன்பே (தாமரை பற்றி எழுதியபோது) குறிப் பிட்டுள்ளேன். ராட்சதச் சிலந்தி, ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?. சர்ப்பயாகம், நாய்குடை ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள்.

'முள்...முள்...முள்' என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறுசிறு கவிதைகளைத் தொகுத்திருக்கிருர் சிற்பி. ரசமான கவிதை இது,

பரு வெடித்த முகமாய்

பருத்த பலாப்பழத்தின்

தோலில் முள் -

சுனேயில்?

சுளேயிலும் தான்,

சுளேக்குள் விதை