பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேயாய் பிசாசாய் நாயாய் நரியாய் எள்ளித் தள்ளினர் ! என்று அகலிகை கூறுகிருள்.

படைப்பு காலம் தொட்டு இன்று வரை, அடக்கி ஒடுக்கி அமுக்கி வைக்கப்பட்டு அலட்சியப்படுத்தப் பெற்று - அவ மதிக்கப்பட்டு-உரிய முறையில் கெளரவிக்கப்படாமலும் திருப்தி செய்யப்படாமலும் குலைந்து கொதிக்கிற பெண் இனத்தின் எடுத்துக் காட்டு அகலிகை.

அவள் கணவன்

மந்திர மொழியை வாயில் அரைத்து

வேள்வியில் இதயத்தை வேகவைத்துத்தின்று,

உடலக் கூட்டை உயிர்க் கயிற்றில் கட்டி

இழுத்துத் திரியும் எந்திரம்!

அவளுேடு நடத்திய தாம்பத்திய வாழ்க்கையில் அவள் அனுபவித்த கொடுமைகளை அகலிகை விவரிக்கிருள். தான் மட்டுமின்றி, தன்னைப் போன்ற பத்தினிகள் அனைவரும் அனுபவித்த அவள் வாழ்வு அது. கணவன் என்பவன்

தவப்பயிரை மனயானே அழித்து மருட்டும் போது,

தன் உடல் காப்புக்கு என் மேனிமலையில் ஏறிக்

கொள்வான்

அதுவும்-முன்னிரவில் உரிமையோடு வாராமல்

நள்ளிரவில் திருடகை வந்து.

என்னைக் கேட்பாளு.மாட்டானே .

மேனி மலேயில் ஏறி

நாகப்பாம்பாய் முகம் தூக்கி

ஒரு சில முறை ஊதித்தள்ளி

விஷவித்தை உடலில் தூவி, இறங்கி ஓடி...

மனக்குகைக்குள்ளே மறைந்து கொள்வான்

5 volul6o

வேதத்தை வேகமாய் விசிறுவான்! .

இந்நிலையில். ஆசைப்புயல் அடித்தடித்துத் திமிர்ந்து கிடந்த தசைத் தீயை, எந்த நாய்க்கு முன்னரும் எடுத் தெரியத் தயாராளுள் அகலிகை.

புது-19