பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

பற்றியோ பேசத் தயாரில்லை. கவிதையின் அணி அலங் காரத்தை பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்கு மட்டும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப் பட்டு வரும் வசன கவிதை முறை புதிதுதான். நவீனம் தான், முற்காலத்தில் இருந்த தாக அவர்கள் குறிப்பிடும் வசன கவிதைக்கும் இதற்கும் சம் பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.

ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற் கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதும் உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆளுல் வசனகவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினல் தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக் கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது. வெறும் வசனம் தான்.

இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர் சுப்ரமணிய பாரதி தான். காட்சி கள் என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப் படிப்பவர் கள் வசனம் எதுவென்றும், வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம். அவருக்குப் பின்னல் அவரைப் பின் பற்றி எழுதி வருபவர்கள் ஒருவேளை அவ்வளவு வெற்றி பெருமல் இருக்கலாம். இன்னும் பரீகைஷ நிலையிலேயே இருக் கலாம். அதனுல் வசன கவிதை செய்யுளின் முன் நிற்கமுடியா தென்ருே, அது கவிதையாக தெள்ருே யாரும் சொல்ல முடி யாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கி, லத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை எந்தக் கற். பன உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர் மானம், முயன்று பார்த்து விடுவது என்றும் ஒரிருவர் தீர்மா னித்து இருக்கிருர்கள் என்று தெரிகிறது. くー事