பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29:

மனிதன் இரண்டான அந்த முதற்காலத்திலேயே எல்லாமும் இரண்டாகி விட்டன.

ஆண்டான் தோன்றிய அதே காலத்தில் அடிமையும் தோன்றி விட்டான். .

தெய்வம் தோன்றிய காலத்திலேயே பேய்களும் பிறப் பெடுத்தன.

நான் அடிமையாகவும் மறுத்தேன். ஆண்டாளுகவும் மறந்தேன்.

அதல்ை கல்லுக்குள் சிறைப்பட-தண்டிக்கப்பட்டேன். காலத்திரை விழுந்தெழும் வேருெரு காலத்தில்ஆண்டான் அடிமை இல்லாத காலத்தில்-இன்பமும் ஞானமும் இணைந்த பொழுதுகளில் உடலும் உள்ளமும் கூடும் கோலத்தில், மனிதனுக மறுபிறப்பெடுப்பேன் என் கிருள் அகலிகை. தனது விமோசனத்தையும் நம்பிக்கை யோடு காண்கிருள் அவள்.

அகலிகை கதையைக் கருவாக்கி விரித்துரைக்கும் மற்று மொரு கவிதை முயற்சியான இதை, இதன் கற்பனைக்காகவும் கருத்தோட்டத்திற்காகவும் பாராட்டலாம்.

வானம்பாடிகளின் மானுடகீதங்கள் வானம்பாடி இதழ் களிலும் இதர பத்திரிகைகளிலும் வெளிவந்தவை, தேர்ந்து தொகுக்கப்பட்டு, வெளிச்சங்கள் என்ற பெயரில் வைகறை: வெளியீடு ஆகப் புத்தக உருவம் பெற்றுள்ளன. . . . வைகறைப் போதுக்கு - - வார்த்தைக்குத் தவமிருக்கும் வானம்பாடிகளே-ஓ வானம்பாடிகளே! இந்த பூமி உருண்டையைப் புரட்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்? ஓ! என் தோழரே, ஒப்பற்ற அந்த மனிதாபிமானக் கவிதையை நம்மில் யார் பாடப் போகிருேம்?