பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இப்படி ஒரு கவிதையில் கேட்டிருக்கிருர் மேத்தா.

மனிதாபிமானமும் சமுதாயப் பார்வையும், தன்னம் பிக்கை ஆற்றலும் எதிர்காலக் கனவுகளும் கொண்டு கவிதை வானத்தில் உற்சாகமாகப் பறக்கத் தொடங்கிய வானம் பாடிகள் சாதித்திருப்பது சிறிதேயாகும். அவர்கள் செய்ய வேண்டியிருப்பது இன்னும் மிகுதி.

34. சின்னத் தொகுப்புகள்

'கசடதபற’ நண்பர்கள், 1972 டிசம்பரில், அவர்களது "இலக்கியச் சங்கம் வெளியீடு ஆக ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு பிரசுரித்தார்கள். புள்ளி என்பது அதன் பெயர். .

ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்த அளவில்", 32 பக்கங்களும் கனத்த அட்டையும் கொண்ட அந்தத் தொகுப்பில், ‘கசடதபற’ இதழ்களில் வெளிவந்த கவிதை களில் தேர்ந்தெடுத்த சிலவற்றை, சில ஒவியங்களுடன் அச்சிட்டிருந்தார்கள், ஒரு பிரதியின் விலை 30 பைசா.

நீலமணி, எஸ். வைதீஸ்வரன், கலாப்ரியா, பதி, பால குமாரன், நா. விச்வநாதன், ஞானக்கூத்தன், ஐராவதம், ஆர். வி. சுப்பிரமணியன், நகுலன் க. நா. சுப்ரமண்யம், நா. ஜெயராமன், கல்யாண்ஜி, வே. மாலி, ஆத்மாராம் ஆகியோரது கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த புதுமையான வெளியீடு தமிழகம் எங்குமுள்ள கவிதைக்காரர்களின் கருத்தைக் கவர்ந்தது. அதனுல், 1973ல், மினி கவிதைத் தொகுப்பு என்று பெயர் பெற்று விட்ட இத்தகைய முயற்சிகள் நாட்டின் பல பகுதிகளிலும் தலையெடுத்தன. -

புள்ளியை அடுத்து வெள்ளம் வருகிறது என்ற அறிவிப்புடன், கலாப்ரியா தனது கவிதைகளைத் தொகுத்து திருநெல்வேலியிலிருந்து வெளியிட்டார். பல நல்ல கவிதுைகள் உள்ளன. இதில். கலாப்ரியா தந்துள்ள