பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

வழக்கங்களை சாடியும், சமுதாய அழுகல்களே அப்படியே பார்த்தும் உணர்ந்தும், பொருளாதாரச் சிக்கலில் புரண்டு அனுபவித்தும் எழுதிய கவிதைகள்’ என்று பலராமன் தன் படைப்புகளை அறிமுகம் செய்துள்ளார்.

வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புக்களைத் தொகுத்து, ᎥᏞᎥfr6üfᎱs தமிழ்நாடன் இருவரும் நீ என்ற தலைப்பில் பிரசுரம் செய்தார்கள். ராசிபுரத்திலிருந்து தெளிவந்த இத்தொகுப்பில் 'மானுடம் ப்ாடும் வானம்பாடிகள் பலருடைய முற்போக்குக் கருத்துக் கள் கொண்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ் வெளியீடு புள்ளி வகுத்துத் தந்த வடிவம் கொண்டதல்ல. கொஞ்சம் பெரிய சைஸ்,

அப்புறம் பிரசுரமான சிறு தொகுப்புகள் அனைத்தும் 'நீ வடிவத்தையே மேற்கொண்டன.

பெங்களுரிலிருந்து ராமி (ராமசாமி) என்பவர் சப்தங் கள் என்ற தலைப்பில், தன் கவிதைகளைத் தொகுத்து வெளி யிட்டார். *பத்திரிகைகளில் எழுதுவதில் நம்பிக்கை இல்லாதவர்' என்று விளம்பரப்படுத்திக் கொண்ட ராமியின், ‘எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்திராத கவிதைகள்’ என்று சில ஆக்கங்கள், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பெற்றுள்ளன. இத் தொகுப்பில், (48 பக்கத் தொகுப்பில் 24 பக்கங்களில் மட்டுமே அச்சு உண்டு) தேர்தல், ஊழல், இந்தியா, விதவை, விலைமகள், மக்கள் தொழிலாளர், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் கவிதை பண்ண முயன்றிருக்கிருர் ராமி. சில படைப்புகள் நன்ருக அமைந்துள்ளன.

சென்னை புதுமலர்கள் இவக்கிய வட்டம்' (கவிஞர் நா. காமராசன், இராம. சுப்பையா) அலைகள்' என்ற மினி' கவிதைத் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. எம்.எஸ். தியாகராசன் தொகுத்தளித்த இதில், பத்துக் கவிஞர்களின் இருபத்தேழு கவிதைகள் உள்ளன. இவர் ரில் பலர் இன்றைய சமுதாயத்தின் இழிநிலைகள், ஏற்றத் தாழ்வுகள்,