பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

வாழ்க்கையின் அவலங்கள் குறித்தே கவிதைகள் இயற்றி யிருக்கிருர்கள்.

ஊத்துக்குளி மேகங்கள் வெளியீடு ஆக பரணி கவிதைகள். என்ற தொகுப்பு வந்தது. மாறுதலுக்காக அல்ல; மாற்றத்திற்காகவே சிந்திக்கிருேம் என்ற இதய ஒலியோடு முத்துப் பொருநன், நீலவண்ணன், கலேபரசு ஆகியோர் தங்கள் புரட்சிகர எண்ணங்களே புதுக்கவிதை களாக ஆக்கியிருக்கிருர்கள். இவர்களே நெருப்புப் பிஞ்சுகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளார் சேலம் தமிழநாடன். இந் தொகுப்பில் உள்ளவற்றில் கவித்தன்மையை விட எண்ண வேகமே மிகுதியாகக் காணப்படுகிறது. - கோவை வானம்பாடி நண்பர்கள் விலை இலாக் கவி மடல்’ என்று தங்கள் கவிதை வெளியீட்டை இலவசமாக விநியோகித்து வழிகாட்டிஞர்கள். அதே தன்மையில் A Pamphlet for Private Circulation only” grgirp & flo புடன் இலவச வெளியீடுகள் பல தோன்றிப் பரவின,

பெருந்துறை இலக்கிய வாசகர் மன்றம் விவேகசித்தன்' எனற மனிதாபிமான இலக்கிய இதழைத் தயாரித்து மாதம் தோறும் வெளியிட முன் வந்தது. இலக்கிய தீபன், ஓடை, பொ. துரை அரசன், பொன். கண்ணன், முத்துப் பொருநன், கலேயரசு, நீலவண்ணன் ஆசிரியர் குழு'வாகச் செயலாற் றிஞர்கள்.

"இலக்கியம் என்பது மொழிப்பற்று, நாட்டுப் பற்று, இனப்பற்று என்கிற குறுகிய கட்டுக்கோப்புக்குள் சிக்கி விடாமல், இவற்றையெல்லாம் கடந்து நிற்கும் மனித சமுதாயப் பற்றை மட்டுமே கொண்ட பரந்த மனப்பாங்கிலே முகிழ்க்க வேண்டும்; அது தனிமனித, சமுதாய நம்பிக்கை களே வளர்க்க வேண்டும்' எல்லோருக்கும் எல்லாம் என்ற நம்பிக்கையை தனி மனிதனிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது விவேகசித்தனின் அவா என்ற அறிவிப்புடன் செயல்பட்டார்கள் இக் குழுவினர்

முற்போக்கு இலக்கியக் கொள்கையும், மனிதாபிமான நோக்கும் கொண்ட பலரது கவிதைகளும் விவேகசித்தன்