பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

இதழ்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வெளியீடு எட்டு இதழ்களோடு நின்றுவிட்டது.

பாண்டிச்சேரி இலக்கிய நண்பர்கள் (ராஜரிஷி, மஹா பிரபு, பிரபஞ்சகவி, சாகித்யன்) ஏன்?’ என்ற இலவச வெளியீட்டை தயாரித்து அளித்தார்கள். முற்போக்கு எண்ணங்களைத் தாங்கி வந்த இக் கவிதை ஏடும் ஆருவது இதழுடன் நின்றுவிட்டது.

திருச்சியிலிருந்து இன்று' எனும் இலவச வெளியீடு வந்தது. இதுவும் சில இதழ்களோடு நின்று போயிற்று.

கோபிச்செட்டிப்பாளையம் நாகராசன் நாணல் என்ற பெயரில் விலையிலா, இருமாதமொரு முறை. இலக்கிய இதழைத் தயாரித்து விநியோகித்தார். வானம்பாடிக் கவிஞர்கள் பலரும் எழுதினர்கள்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியைச் சேர்ந்த ஐ. சி. பழநி, பி. அ. தாவீது இருவரும் 'ஐ' என்ற புதுமையான பெயரில் கவிதை மலர் தயாரித்து வெளியிட்டார்கள். அழகான முறையில் உருவாக்கப்பட்ட இச்சிறு வெளியிட்டில் புதிய சிந்தனைகளை உள்ளடக்கிய ரசமான கவிதைகள் நிறைந் துள்ளன.

எனது பார்வைக்குக் கிடைத்த இத்தகைய ஏடுகள் தவிர மற்றும் அநேக வெளியீடுகள் வந்திருக்கக் கூடும். பொது வாக சமூக முன்னேற்றத்துக்காக சிந்திக்கும். தார்மீகக் கோபம் கொண்ட இளைஞர்களின் கனவுகளே, எண்ணங் களே, துடிப்பான உணர்ச்சிகளை வெளியிடும் சிறுசிறு முயற்சி களாகவே இவை அமைகின்றன. அநேக சமயங்களில், இவற்றில் பெரும்பாலானவை, ஆசைகளின் மலர்ச்சி களாகவும் வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவுமே தோன்றுகின்றன. உண்மையான ஆற்றலின், கவித் திறத்தின பரிணமிப்புகளாக அமைவதில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.