பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மாயின. இத்தொகுப்புக்கு நகுலன் முள்னுரை எழுதி யுள்ளார்,

"இன்குலாப் கவிதைகள்’ என்ற தொகுதி 1972ல் வெளி வந்தது. கவிஞர் இன்குலாயின் முற்போக்குக் கவிதைகளே "மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள் என்று இள வேனில் அறிமுகம் செய்து நீண்ட முன்னுரை எழுதி யுள்ளார். கண்மணி ராஜம், யுகப் பிரளயம், கிரெளஞ்ச வதத்திற்கு கேள்விகள் இல்லையா? நாடோடிகள், வயல் வெளிகளின் கதாநாயகன், பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிருர்கள்! போன்ற புதுமை நோக்கும் உணர்ச்சி வேகமும் கொண்ட படைப்புகள் இதில் உள்ளன.

‘ஆக்டோபலம் நீர்ப்பூவும் என்ற தொகுப்பு 1972ல் பா8ளயங்கோட்டையிலிருத்து வெளிவந்தது. குவேரா, தமிழவன், ஆராமுதம், பிரம்மா, ரிஷிதேவன், தீர்த்தங்கரன் எனும் இளைஞர்களின் முற்போக்குப் புதுக் கவிதைகள்.

செந்ெெநல் வயல்கள்’- குருவிக்கரம்பை சண்முகம் எம். ஏ. மரபுக் கவிதைகளுடன், புதுக் கவிதைகளும் எழுதி யுள்ளார். பருவப் பயணம், பழகத் தயார் ஆகி, கள்ளக் காதல் நடத்தும் பூங்கொடி பற்றிய கள்ளத்தோணி பாலே வனப் பாதையை வர்ணிக்கும் மணல் வழி புோன்ற புதுக் கவிதைகள் இதில் இருக்கின்றன.

973ல் வானம்பாடி கவிஞர்களின் கவிதைத் தொகுதி யான வெளிச்சங்கள் பிரசுரமாயிற்று.

தர்மு அரூப் சிவராமின் கண்ணுடிக்குள்ளிருந்து' என்ற தொகுப்பு அக் வெளியீடாக வந்தது.

ஞானக்கூத்தன் கவிதைகள் அன்று வேறு கிழமை எனும் அழகிய புத்தக வடிவில் பிரசுரமாயின.

சேலம் தமிழ்நாடனின் முற்போக்குக் கவிதைகள் "மண்ணின் மாண்பு என்ற புத்தகமாகவும், லெக்ஸ் கவிதைகள் காமரூபம்’ என்றும் வெளிவந்தன.