பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.2

வாழ்க்கை முறை, கல்வி முறை முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும், சஞ்சிகைகளின் தோற்றமும், புதிய சிந்தஐன களின் தாக்கமும், புதுமை வேட்கையும், இளமைத் துடிப்பும் ஒன்றுபட்டு, இக்குழுவினரிடம் நவீன இலக்கியத்தில் ஈடு பாட்டினை ஏற்படுத்தின. இத்தகைய ஈடுபாட்டின் பரிசீல னைத் தாகத்தின் வெளிப்பாடே புதுக் கவிதையை எழுதிப் பார்க்கவும் தூண்டிற்றெனலாம்.

இவர்களது இம்முயற்சிக்கு சமகாலத் தமிழ் நாட்டின் போக்கு பெரிதும் உந்துசக்தி அளித்தது, மணிக்கொடி, சூருவளி பத்திரிகைகளினுல் ஈழத்து எழுத்தாளர்கள் பாதிப்பு பெற்றிருந்தனர். 1942ல் வெளிவந்த கலாமோகினிiயில் புதுக் கவிதை வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. 1943ல் "கிராம ஊழியன் வெளிவரத் தொடங்கியதும் அது மேலும் வேகம் பெற்றது.

"கிராம ஊழியன் வெளிவரத் தொடங்கிய காலத்திலேயே ஈழத்திலும் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிச் சங்கம் தோன்றி யது. அச்சங்கம் வெளியிட்ட மறுமலர்ச்சியிலும், பாரதி” யிலும், ஈழசேசரியிலும் எழுதி வந்த படைப்பாளிகளுக்கு கலாமோகினி. கிராம ஊழியன் ஆகியவற்ருேடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஈழத்தவர் படைப்புகளும் அவற்றில் வெளிவந்தன. 13-6-43ல் வெளிவந்த ஈழகேசரி’யில் ஒர் இரவினிலே என்ற நீண்ட வசன கவிதையை வரதர் எழுதி யிருந்தார். ஈழத்தில் வெளிவந்த முதல் புதுக் கவிதை இது என்று கூறலாம்.

இருள்! இருள்! இருள்!

இரவிலே நடு ஜாமத்திலே

என் கால்கள் தொடும் பூமி தொடங்கி

கண் பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை

இருள்! இருள் இருள்:

பார்த்தேன்.

பேச்சு மூச்சற்று