பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணம் போல் கிடந்தது பூமி. இது பூமிதானு? இப்படித் தொடங்கி, பேய்க் காற்றையும் மின்னலையும் இடிமுழக்கத்தையும் வர்ணித்து வளர்கிறது. இது.

இக்கால கட்டத்தில் ந. பிச்சமூர்த்தி கலாமோகினி'யில் 'மழைக்கூத்து’ என்ற கவிதையை எழுதியிருந்தார். அந்தக் கவிதை வரதருக்கு இயற்கைக் கூத்துகளை விவரிக்கும் கவிதையை எழுதத் துண்டுதலாக அமைத்திருக்கலாம். ஆயினும் இரண்டு கவிதைகளும் வேறுபட்ட உணர்ச்சி களின் வெளிப்பாடுகள் ஆகும், வரதர் கவிதை இயற்கைக் கூத்தை அச்சம் கலந்த அனுபவ உணர்ச்சியுடன் விவரிக் கிறது. ந.பி. கவிதை வியப்புணர்ச்சியுடன் அதிசயிக் கிறது. w r

ஆரம்பகாலப் புதுக் கவிதைகள் பெரும்பாலும் வாழ்க்கை பற்றிய பலதரப்பட்ட சிந்தனைகளையும், இயற்கை பற்றிய அனுபவங்களையுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. வாழ்க்கை நிலையாமை பற்றி எழுதியவர்களுக்கு மாருக, :பாரதி' எனும் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையில் எழுதிய வர்கள் நம்பிக்கைக் குரல் எழுப்பினர்கள்.

நீலக் குமிழ் இடும் ஆழமான நதிகள் நலமான செல்வ மணி திரளும் கனிகள் இவற்றின் மேல் புதுயுகம் பூத்தது, அதன் சிகரம் உயர்ந்துயர்ந்தது, உழைப்பும் வியர்வையும் இனிது என்று முழக்கம் செய்கின்றது சிரஞ்சீவிக் குரல் கொண்டு. (ராம்" } வெட்டவெளியாகத் தெரிந்த இடம் இன்று விண்ணே யெட்டும் சொர்ண பூமியாகத் தெரிகிறது. அந்தகாரத்தின் குகையிலே அதிசய தீபம் அதன் ஒளியிலே அகிலமே இன்பச் சுரங்கம் (தங்கம்)

போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.