பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

யின் இத் தனித்துவப் பண்பு சிலசமயம் மிகுதியாக இடம் பெற்று, புதுக் கவிதை சிறப்பிழக்க வழி வகுக்கின்றது. ஈழத்துப் புதுக் கவிதைகளில் இத்தகைய பண்பு இடம் பெறல்- படிமம், குறியீடு அமைதல்-குறைவாகும். தமிழக புதுக் கவிதைக்கும் ஈழத்துப் புதுக் கவிதைக்குமிடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுள் இது முக்கியமானது.

ஆயின். படிமம் குறியீடு என்பனவற்றுக்குப் பதிலாக வேறு சில பண்புகள் ஈழத்துப் புதுக் கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுளொன்று, பேச்சு வழக்குச் சொற்கள், சொற்ருெடர்கள், பேக்சோசைப் பண்பு முதலியன அமைவதாகும். கவிதையில் அடுக்கடுக்காக உவம, உருவகத் தொடர்கள் அதிகம் இடம் பெறுகிறபோது, எளிதில் விளங்கிச் கொள்ளத் தடை ஏற்படுகிறது. பேச்சு வழக்குச் சொற்கள், பேச்சோசைப் பண்பு சேர்கிற கவிதை மிக எளிதான தன்மை உடையதாக இருக்கிறது.

இவ்வாறு படிமம், குறியீடு முதலியன இடம் பெருமலும் பேச்சு வழக்குச் சொற்கள்- சொற்ருெடர்கள்-பேச்சமைதி, எளிமை முதலியன இடம் பெறுவதாலும் ஏற்படும் பயன் விதந்துரைக்கத்தக்க ஒன்ருகிறது. குறியீடு, படிமம், உவம, உருவகத் தொடர்கள் மிகுதியாக இடம் பெறுவதகுல், தெளிவின்மை ஏற்படுவதோடு, புதுக் கவிதை வளர்ச்சிக்கும் அது குந்தகமாகின்றது. எவ்வாறு மரபு வழிக் கவிதைகளில் கருத்துக்களே வெளிப்படுத்த சில சமயம் யாப்புத் தடையாக இருக்கிறது என்று கூறப்படுகிறதோ அவ்வாறே புதுக் கவிதைகளில் மேற்கூறுய இயல்புகளினுல், கருத்திலே விளங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகும். உருவாகவே மரபு வழிக் கவிதையிலிருந்து புதுக் கவிதை கிளைத்தது போல, புதுக் கவிதையிலிருந்து பிறிதொரு வகைக் கவிதை உருவாதல் சாத்தியமாகலாம்,

அது மட்டுமன்று. புதுக் கவிதையின் பயன்பாடும் இதளுல் குன்றுகிறது. சமுதாயக் குறைபாடுகளைக் களையவோ, சமுதாய மாற்றுக்கான கருத்துக்களைச் சாதாரண மக்களுக்குப் புரிய வைக்கவோ இயலாது போகலாம்,