பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30?

ஆளுல், ஈழத்துப் புதுக் கவிதையில் காணப்படும் மேற் குறித்த இயல்புகள்- படிமம், குறியீடு குறைவாகக் காணப் படுதல், பேச்சு வழக்குச் சொற்கள், சொற்ருெடர்கள், பேச்சோசைப் பண்பு அமைதல், எளிமை-தொடர்ந்தும், (பழமொழிகள், நாட்டுப் பாடல் தன்மைகள் முதலியன வற்றேடு) நன்முறையில் விருத்தியுறுமாயின், எதிர்காலத்தில் புதுக்கவிதை பயனுடையதாகச் செழித்து வளர, ஈழத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது.”

39. இன்றைய கிலேமை

புதுக் கவிதை வாலாற்றை இவ்வளவு தூரம் கவனித்த பிறகு, இது இன்று எவ்வாறு உள்ளது, புதுக்கவிதை உண்மையான வளர்ச்சிப்பாதையில் போகிறதா, புதுக் கவிஞர்களின் தற்காலப் போக்கு எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்தை அடைந்திருக்கிருேம்,

புதுக் கவிஞர்களின் இன்றையப் போக்கும், புதுக் கவிதைகள் என்று எழுதப்படுகின்றவையும் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பதாகவுமில்லை; இலக்கிய ரசிகர்களுக்கு உற்சாகம் தருவனவாகவும் இல்லை என்பதை குறிப்பிடத் தான் வேண்டும்.

‘தீபம்’, 'கணேயாழி இதழ்களில் புதுக்கவிதை முன்பு போல் அதிகம் இடம் பெறுவதில்லை. ஆயினும், புதுக் கவிதைகளே விரும்பிப் பிரசுரிப்பதற்கு அநேக இலக்கிய வெளியீடுகள் சதங்கை, பிரக்ளுை, தெறிகள், விழிகள், நீலக் குயில் முதலியன உள்ளன.

‘கசடதபற’ மீண்டும் வெளிவருகிறது, மற்றும் உற்சாக முள்ள இளைஞர்கள் குழுகுழுவாகச் சேர்ந்து கொண்டு ஏதாவது ஒரு பெயரில், சோதனை ரீதியில், வெளியீடுகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிருர்கள். இவற்றில் எல்லாம் புதுக்கவிதை என்ற பெயரில் யார் யாரோ, என்னென்னவோ எழுதிக்கொண்டுதான் இருக்கிறர்கள்.