பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}{}

கும் போய்வந்தோம். எங்கும் தமிழ்த் துறைப் பேராசிரியர் களும் எம். ஏ., தமிழ் மாணவர்களும் புதுக் கவிதை”யில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளதை அறிந்து மகிழ் வுற்ருேம். உண்மையாகவே சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதுக் கவிதைக் காரர்களை மட்டம் தட்ட வேண்டும்’ என்ற நோக்குடனும் எங்களிடம் பலப்பல கேள்விகள் கேட்கப்பட்டன. நாங்கள் உரிய முறையிள் தகுந்த பதில்களைக் கூறினுேம்,

"புதுக் கவிதைக்கு எதிர்காலம் உண்டா? வளமான இலக்கணத்தையும் ஆழமான கவிதை மரபையும் கொண்ட தமிழ் இலக்கியத்தில் புதுக் கவிதைக்கு நிலையான ஒரு ஒரு இடம் உண்டா?’ என்று ஒரு பேராசிரியர் என்னிடம் கேட்டார். -

‘புதுக் கவிதையின் எதிர்காலத்தைப் பற்றி உறுதி கூறு வதற்கு, நான் புதுக் கவிதை பற்றிய சோதிடம் எதுவும் கணிக்க முற்படவில்லை. அது காலம் முடிவுகட்டக் கூடிய ஒரு விஷயம் ஆணுலும், புதுக் கவிதையின் வரலாற்று அடிப்படையில் தெளிவாகிற ஒரு உண்மையைச் சொல்ல லாம். 1930களில் சோதனை முயற்சியாக இரண்டு பேரால் தொடங்கப் பெற்ற வசன கவிதை", 1940களில் வலுப் பெற்று வளர்ந்தது. நாற்பதுகளின் கடைசிக் கட்டத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. தமிழுக்குப் புதுசான வசன கவிதை முயற்சி செத்தொழிந்தது என்று, அதை எதிர்த் தவர்கள் சந்தோஷப் பட்டார்கள். ஆனுல், 1900களில் "எழுத்து பத்திரிகையின் வளர்ச்சியோடு, புதுக் கவிதையும் புத்துயிர் பெற்றது. அது வேக வளர்ச்சி பெறும் வகையில் திறமையாளர்கள் பலர் படைப்பு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். அதன் பிறகும் புதுக் கவிதைக்குப் பெரும் ஆதரவும் கவனிப்பும் கிட்டியுள்ளன. மரபுக் கவிதைகளில் சொல்ல முடியாததை-அல்லது மரபுத் கவிதையில் சொல்ல முடிகிறதை வி - அழகாகவும் நய மாகவும் சுதந்திரமாகவும் தங்கள் எண்ணங்களே- புதுக்