பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

இந்த மாதிரியான வசன கவிதையை பாரதியார் கையாண்டிருக்கிருர்.

"ஞாயிறு வையமாகிய கழனியில் வைர ஒளியாக நீர் பாய்ச்சுகிறது.

அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகிறது, மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புன&ல வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.

இதில் கவிதையின் லட்சணத்தைக் காணுவிட்டால் வேறு எங்குதான் காணப்போகிருேம்? இம்மாதிரி கவிதை. அடங்கிய தொகுதி ஒன்றை பாரதியார் காட்சி என்ற தலைப் பின் கீழ் வெளியிட்டிருக்கிருர். வழி என்னவோ புதியது. அழகு மட்டும் உலகு தோன்றிய நாளாகக் காண்பது.

"இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து. காற்றும் இனிது.

தி இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று. திங்களும் நன்று.

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது. கடல் இனிது. மழை இனிது. கசடு நன்று. இது வசனமா? கவிதைக்கும் வசனத்திற்கும் வார்த்தை கள் என்னவோ பொதுவானுலும், கவிதையின் சுருதி வேறு. வசனத்தின் சுருதி வேறு. வாய் விட்டோ விடாமலோ இதைப் படித்தாலும், நாம் வசன உலகில் காலால் நடக்கவில்லை என்றும் கவிதை உலகில் இறகுக் கட்டிக் கொண்டு பறக்கி ருேம் என்றும் உணர்ச்சி சொல்லும். வசனத்திற்கும் கவிதைக்கும் மற்ருெரு பெரிய வித்தியாசம் உண்டு. *வியஷடி என்கிருர்களே, அந்தப் பன்மையையே வசனம் வற்புறுத்தும். கவிதை ஒருமையை வற்புறுத்தும். உடலுக்கு எலும்புக்கூடு எப்படியோ அதைப் போலவே, இந்த ஒருமை

என்னும் குணம் கவிதையின் அஸ்திவாரமும் அழகும்