பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கனா; இல்லையென்ருல் சாப்பிட்டுப் பாருங்கள். காயின் புளிப்பும், கனியின் இனிப்பும் கலந்த ஒரு புதுச்சுவை இனிய ருசி-அதில் இருக்கக் காண்பீர்கள்.

கணித்த கனி போன்றது கவிதை. காயொத்தது உரைநடை. இவைகள் இரண்டையும்தான் நாம் நன்ருய் அனுபவித்திருக்கிருேம். காயும் கனியுமில்லாத செங்காய் பதம் வசன கவிதை. கவிதையின் இனிமையும் உரை நடையின் விருவிருப்பும் இதில் இருக்கிறது. செங்காயைச் சுவைப்பதிலும் ஒரு புது இனிமை உண்டு.”

(கலாமோகினி-30) இக்கட்டுரைக்கு எதிரொலி இலங்கையில் தோன்றியது. "ஈழகேசரியில் வழக்கமாக எழுதி வந்த இரட்டையர்', வசன கவிதை புதிய தோற்றம் அல்ல; முன்னரும் அது வெவ்வேறு வடிவங்களில் தமிழில் வழங்கி வந்தது என்று வாதாடியிருந்தார்கள். சுவாரஸ்யமான அக்கட்டுரை கலா மோகினி'யில் மறு பிரசுரம் செய்யப்பட்டது. இரட்டையரின் சுவையான கருத்துக்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காக அந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன்.

'பிஞ்சுமாகாது பழமுமாகாது செங்காய் என்று சொல் வார்களே, அந்த நிலைதான் வசன கவிதைக்குரியது. யாப்பிலக்கண வரம்பை மீறியதாய் ஆளுல், கவித்துவம் பெற்றதாக உள்ள-சிறந்த வசனங்களையே வசன கவிதை எனப் பெயரிட்டழைக்கிருேம்.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றிலுள்ள பாடல்களையே பார்த்து, இவை எல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை? என்று ஒச்சம் சொல்லும் பழைய மரபினர் எவ்வித இலக்கணமும் அமையாத இந்த வசன கவிதைக்கு இடம் கொடுப்பார்களா? அவர்கள் இதை எதிர்க்கிருர்கள். .

"நல்லது! அந்தப் பண்டித சிகாமணிகள் வெறும் புளி மாங்காயையும், கருவிளங் காயையும், கருவிள நறு