பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏளுே?

சந்த்ரன் நல்லாக் காயுராண்டா

சின்ன ராயப்பா- அந்த

மந்த்ரத்துலே மயங்கி நிக்கிது

மட்டை குட்டை எல்லாம்,

பாம்பெறிந்த சட்டை போல

சின்ன ராயப்பா - இந்த -

ஆம்பல் வர்ண ரோட்டு ரொம்ப

அழகு பொங்குது.

வெளிச்சத்தாலே ஆகாசத்தை

சின்ன ராயப்பா - யாரோ

பளிங்கைப்போல் பண்ணிவிட்டா

சின்ன ராயப்பா,

அழகும் சொகமும் சொக்குதடா

சின்ன ராயப்பா- எங்கும்

மழலை பேசும் காத்தெக் கேளு

சின்ன ராயப்பா.

நிலவும் நீயும் எனக்கிருந்தும்

சின்ன ராயப்பா- நல்ல

நெல்லும் நெழலும் நெறஞ்சிருந்தும்

சின்ன ராயப்பா அந்த .

பனங்கொளத்து வீட்டுக்காரி

நடை குலுக்கிலே-தொலை

உலவிச் செல்லுதாவி யேனே

சின்ன ராயப்பா.

கு. ப. ரா. தனது கவிதைகளே கருவளையும் கையும்"

என்ற தலைப்பில் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்தார். ஆனல் அவருடைய ஆசை அவர் காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரியே நிறைவேற வழி ஏற்படவில்லை. அந்தத் தொகுப்பு வெளி வந்திருந்தால் அது தமிழ்க் கவிதை உலகில் குறிப்பிட தகுந்த ஒரு அருமையான புடைப்பு நூலாகத் திகழ்ந் திருக்கும்,