பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

இது கலாமோகினி'யில் வந்தது. அதே பத்திரிகையில் பிரசுரமான கவிதைகளில் யோகம் கலைதல்’ என்பது தனிச் சுவையும் நயமும் கருத்தாழமும் கொண்டது. கவிதை அன்பர்களின் ரசனைக்காக அதையும் இங்கே தருகிறேன்.

1

கரிச்சான் ஒன்று கூரை மேலிருந்து மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி வாய் திறந்து வேதம் பாடக் கேட்டு நான் அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!

2

கோதை யொருத்தி குளத்து நீரில் தனிமையில் அழகு பார்த்து ஆனந்தம் கொண்டு நின்ருள்; பாதையில் ஒளிந்து பார்த்துப் பரவசமெய்திய நான் நிலைதடுமாறி நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டேன்; மாததைக் கேட்டு மிரண்டுபோய் மேலாக்கிழுத்து குடமெடுத்துக் கொண்டு கடுகியே போய்விட்டாள்:

3

கவியொருவன் கனவில் ஆழ்ந்து கற்பனை கண்டு கருத்தை வெளியிட செவிமூடிச் செய்யுள் செய்யவிருந்தான்; தெரியாமல் அங்கே திட்டென்று போய்நான் கவி அழித்தேன்; சொல் இழந்து அவன் கடுந்துயருடன் கீழே சாய்த்தான்!

இக் கால கட்டத்தில் ந. பிச்சமூர்த்தி சிறு சிறு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, நீண்ட கவிதைகளும், சிறு காவியங்களும் எழுதலானர். அவை கலாமோகினி'யில் வந்தன. பின்னர் கிராம ஊழிய*னில் அவர் பல் ரகமான கவிதைகளும் எழுதித் தனது சோதனை