பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德

களேத் தொடர்ந்தார். அவை குறித்து உரிய இடத்தில்

விரிவாக எழுதுவேன்.

6. புத்த பக்தி

‘பிகஷூ வின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு, நானும் கவிதைகள் எழுதலானேன்- 1942 முதல். 1943ல் நான் "சினிமா உலகம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணைஆசிரியர் ஆனதும், எனது கவிதைகள் அதில் அவ்வப் போது அச்சாயின. அந்த சமயத்தில் நாட்டியக்காரி, ஆடும் அழகி, கலே, சினிமா போன்றவையே என் கவிதைப் பொருள் கள் ஆயின.

அவ்வருடத்தின் இறுதியில் நான் சென்னை சேர்ந்து, தவசக்தி மாசிகையில் பணிசெய்ய முற்பட்டேன். திரு.வி.க. வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த நவசக்தி யை சக்தி தாசன் சுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டார். சக்திதாசன் அதை இலக்கிய மாத இதழாக நடத்திக் கொண்டிருந்தார். கே. ராமநாதன் அதன் துணை ஆசிரியர். அவர் கம்யூனிஸ்ட், "முற்போக்கு இலக்கியவாதி. 'நவசக்தி'யை முற்போக்கு இலக்கிய இதழ் ஆகக்கொண்டு வருவதில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் நானும் போய்ச் சேர்ந்தேன்.

அது யுத்த காலம். ஜப்பானியரையும், பாசிஸ் வெறியை யும் எதிர்த்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் உருவா கிக் கொண்டிருந்த காலம். கவி ரவீந்திரநாத தாகூர் ஜப்பானி யரின் பலாத்காரத்தை வெறுத்தும், கண்டித்தும், எழுதிக் கொண்டிருந்தார். ஜப்பானியர்கள் யுத்தம் மூலம் ஆசிய நாடு களில் நாசத்தை விதைத்து வந்தபோதே, தங்கள் முயற்சி யில் வெற்றி பெறவேண்டும் என்று புத்தர் ஆலயத்தில் பூஜை கன் நடத்தினர்கள் என்ருெரு செய்தி வந்தது, அதைக்கண்ட தாகூர், மிருக வெறியைப் பரப்புகிற ஜப்பானியர் புத்தருக்கு பக்தி செலுத்துகிருர்களாம் என்று குத்தலாகச் சுட்டிக்காட்டி