பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கவிஞர் திருலோக சீதாராம் கருதினர். எனவே, பாரதியின் அடிச்சுவட்டில், காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; நாம் இருவரும் அத்தகைய படைப்புக்களை உருவாக்குவோம் என்று அவர் என்னிடம் சொன்னர், இரட்டையர்' என்று நாங்கள் இருவரும் எழுத தீர்மானித்தோம். -

"பாரதி அடிச்சுவட்டிலே’ என்பது தான் அதற்குத் தலைப்பு, அதற்கு ஒரு முன்னுரை கிராம ஊழியன்’ 16-6-1944 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் சில முக்கிய மான பகுதிகள்:- - "பாரதியின் ரசிகர்கள் நாங்கள், கலைஞனின் சிருஷ்டி க3ளப் படித்து ரசிப்பது மட்டுமே எங்கள் தொழில் அல்ல. அவர்களைப் போற்றுவதுடன் நிற்பது எங்களுக்கு திருப்தி தராது. ஒரு கலைஞனின் ஆசைகளும், கனவுகளும் அவ னுடன் முடிந்துவிடாமல், அவன் சிந்தனைச் சரம் தொடர் பற்று விடாமல், அவனது புதுமைப்பாதை வெறும் பாலே நடுவே கலந்து, இருந்த இடம் தெரியாது மங்கிவிடாமல் காப்பதும் ரசிகர்கள் கட மை,

இலக்கியக் குலத்திலே பாரதி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் சகோதரர்கள் செய்துவரும் முயற்சிகளே நாங்கள் கவனித்து வந்தோம். கவனிக்கிருேம். எங்களுக்கு முந்திய தலைமுறையினரும், பிறரும் செய்யாத காரியங்கள் பல பாரதி இலக்கிய சரித்திரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்கிருேம், - - - -

இதுவரை எல்லோரும் பரதியின் கவிதைகளைப் பின் பற்றியுள்ளனர். வசனத்தையும் பின்பற்றியிருக்கிருர்கள். ஆனல் பாரதி கையாண்ட புது முயற்சியை யாரும் தொடர்ந்து செய்யவில்லை. நன்கு ஆராயக் கூட இல்லை. அது தான பாரதியாரின் காட்சிகள்’.

மகுடி நாதத்து இசை போன்றதுதான் பாரதியின் புது முயற்சியான காட்சிகள்’. பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது. மகுடி நாதத்