பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

திலே ஒலிக்கும் வாது போலவே பாரதியின் எழுத்துக்களிலும் ஒரு வேகம் துள்ளுகிறது, கவிதை யாவும் தனக்கெனக் கேட்ட பராசக்தியின் புகழ் பாட பாரதி எனும் பாணன் கையாண்ட சொல் கருவியிலே பற்பல தோற்றம் சிருஷ்டிக்க முயன்றதன் விளைவுதான் காட்சிகள்’. பாட்டினிலின்பமும் கற்பனை விந்தையும் ஊட்டியெங்கும் உவகை பெருகிட ஓங்குமின் கவி ஒதிய பாரதியார், பொருந்தாத பொருள் கனப் பொருத்தி இசைத்த ஜாலம் தான் காட்சிகள் ஜகத் சித்திரம் முதலியன என்பது எங்கள் கருத்து. பாரதிசென்ற சுவட்டிலே நாங்களும் துணிந்து அடி எடுத்து வைக்க முன் வத்து விட்டோம். ... :

நாங்கள் செய்யப் போவது மாரீசம் அல்ல. பாரதி இலக்கியத்தின் புது அத்தியாயத்தை வளர்க்கப் போகிருேம், எங்கள் உள்ளத்து மூச்சை சொல்லெனும் மகுடியிலே ஒட்டி சக்தியின் லீலையை பரப்புவோம். பாரதி பெருமையைப் பாடுவோம். பாரதியின் பக்தர்கள் நாங்கள்.

எங்கள் முயற்சிக்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும் சரி; நாங்கள் கவலைப்படப் போவதில்லை, ஒரு எழுத்தாளன் சொன்னதைப் போல, "எமது எழுத்துக்களே கவிதை, கட்டுரை, வசன கவிதை என்று எப்பெயரிட்டு வேண்டு மாலுைம் அழையுங்கள்; நாம் கையாள விரும்புவது சொற் கள்தான்; சொற்களுக்கு உயிருட்டுவதே எமது நோக்கம்”.

முதலாவதாக, அழகு பற்றி நான் எழுதினேன்

உமையின் கவிதை உலகின் உயிர்ப்பு. உயிரின் சக்தி. சக்தியின் சிரிப்பு. சிவத்தின் மலர்ச்சி.

மலரின் சிறப்பு. ஜீவனின் ஒளி, ஆத்மாவின் சுடர்.

அழகு எங்கும் நிறைந்தது. கண்ணுக்குத் தெரிவது. தெரியாமல் ஒளிர்வது.