பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையின் கலே. காவிய நயம், அழகே அனைத்தும், அது வாழ்க * வியன் வானத்திலே மோன நகை புரிகிறது அழகு. விரிகடலில் தவழ்கிறது. புரள்கிறது. குதிக்கிறது. துள்ளுகிறது அழகு. -

பூங்காவில் புன்னகை பூத்து ஒளிர்கிறது. - பகலின் ஒளியில், இரவின் இருளில். நிலவின் கதிரில், வெள்ளியின் சிமிட்டில், மின்னலின் பாய்ச்சலில் ஆட்சி புரி கிறது அழகு. -

மங்கையின் மேனியில், அவள் அங்கங்களில், கண்களில் கன்னத்தில், குமிண் சிரிப்பில் அழகு நெளிகிறது.

மனிதனின் உள்ளத்தில் உறையும் அழகு. பார்வையில் பிறக்கிறது எழிலுறு காட்சியாக, நரம்பில் புரளும் அழகு - கைவிரல் அசைவில் மலர்கிறது கலையாக. காலில் ஜதி பேசுகிறது நடனத்தில். - உடலின் துவள்தலில் மின் எழில் பிரகாசிக்கிறது. இதயக் குரல் முனகும் அழகு. - கவிதையில், காவியத்தில், இலக்கியத்தில் கனவாய் சிரிக்கிறது.

அழகு இல்லாத இடம் எது? அழகின் சிரிப்பு பொலிவுறுத்தாதது எது? அழகு அடியற்றது. முடிவற்றது. அழகு ஆனந்தமானது. அகண்டமானது. ஆழமானது.

அழகை உணரலாம். ஸ்பரிசிக்க முடியாது. அழகை வியக்கலாம். வர்ணிக்கலாம். விளக்க முடி யாது. - -

அழகு ஒரு கலை. அதுவே தத்துவம், அழகே சக்தி. அதுவே சிவம். அழகைப் போற்றுகிறேள். துதிக்கிறேன். வணங்கு கிறேன். -

அது வாழ்க.