பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான, காவியம் பிரசுரமாயிற்று. அந்த மலரில் தான் புதுமைப்பித்தன், வேளுர் வெ. கந்தசாமி பிள்ளை என்ற பெயரில். தனது முதல் கவிதையை வெளியிட்டார்.

‘கடவுளுக்குக் கண்ணுண்டு கண்ணுே, நெருப்பு வைக்க;

தலையில் பிறையுண்டுதணல் கையில் உண்டுண்டு!”

என்று ஆரம்பிக்கும் கவிதை அது. கடவுளுக்குக் கண்ணுண்டு என்பது அதன் பெயர்.

1944 அக்டோபரில் வெளிவந்த கிராம ஊழியன்’ ஆண்டு மலரில் வேளுர் வெ. கந்தசாமி பிள்ளையின் இரண்டாவது கவிதை ஓடாதீர்!! பிரசுரமாயிற்று. لتني عتيه அச்சில் வருவதற்கு முன்னரே எழுத்தாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. கோவையில் நடைபெற்ற முேதலாவது தமிழ் எழுத்தாளர் மகாநாடு மேடையிலும், நண்பர்கள் நடுவிலும், திருலோக சீதாராம் அதை உணர்ச்சிகரமாகப் பாடி ஒலிபரப்பியதே காரணமாகும்.

வேகமும், உணர்ச்சியும், கருத்தாழமும் கொண்ட சஓடாதீர் புதுமையானது; புரட்சிகரமானதும்கூட.

H

ஓகோ உலகத்தீர், ஓடாதீர். சாகா வரம் பெற்ற, சரஸ்வதியார் அருள் பெற்ற, வன்னக் கவிராயன்

நானல்ல.

IH

உன்னிப்பாய் கேளுங்கள், ஓடாதீர்:

வானக் கனவுகளே வக்கணையாச் சொல்லும்