பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலவும் கவிதை

பில்லுக் கட்டைத் தலே சுமக்க பில்லறிவாள் இடையிருக்க அந்த ஒளி சாய்கையிலே அவன் அசைந்து போருனே?

புதுக் கள்ளின் நுரைபோலே பொங்கி வரும் புத்தழகு மங்கி வரும் கதிரொளியில் மயக்கந்தரு குதையோ!

அணில் கடித்த மாம்பழம் போல் அழகு சொட்டும் செவ்விதழ்கள் சருகான வெற்றிலையில் அமுதினிமை கண்டனவோ!

காதிற் சுருளோலே கண்டத்தில் பாசிமணி அரையிற் கிழிந்த உடை அமைவான குலுக்கு நடை

"அத்தான் வந்திடுவான் ஆந்திவரை ஆழுது விட்டு; கித் தெழுந்திப் போகவேனும் செம்மறியைக் கட்ட வேணும்

என்றெண்ணம் ஓடி வந்து இங்கு முகம் திருப்பி நிற்க, சலங்கை ஒலி கிந்திவிட்டு சாடிவரும் இளமறியும்;

அப்போது பார்த்து விட்டேன்

அவளழகு முழுவதையும் என் நெஞ்சைக் கிளறிவிட்ட எழுதவொண்ணுக் காவியத்தை!

1947 மே மாதம் கிராம ஊழியன் நின்று விட்டது. இறுதிவரை அந்த மாதம் இருமுறைப் பத்திரிகை வசன கவிதை வளர்ச்சிக்காக முழு மூச்சுடன்உழைத்து வந்தது.

பு-5