பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

மலர்களின் மணமே தெய்வ வாசனை,

ஸ்பர்சமே தெய்வத் தீண்டல்.

பார்வையே ஒளியின் அல.

உலகின் ஒளிகளே பரத்தின் நாதம்.

மனமே! புலன்கள் தளையல்ல,

விடுதலைக் கால்வாய். -

அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்

அவனே அறிய, X

ஆதி அழகில் மூழ்கி எழ,

கிளியே ஈசனே ஊணுய், உருவாய், மலர்ந்திருக்கிருன்,

புலன்களொரு ஏணி.

ஏணியைத் துாற்ருதே!

("கிளிக்குஞ்சு)

வாழ்க்கை என்பதே போராட்டம்தான். அதில் சோனி யாகி ஒடுங்கிப் போவதில் பயனில்ல; இன்பமுமில்லை. எதிர்த்து நின்று போராட வேண்டும். இயற்கையும் அதைத் தான் கற்றுத் தருகிறது. இந்தத் தத்துவத்தை பிக்ஷ" :ஒளியின் அழைப்பு என்ற கவிதையில் விளக்குகிருர்.

பட்டப்பகலில் இரவைக் காட்டும். நிழல் கொண்ட பெரிய மரம். அதனடியில் ஒரு கமுகு.

ரத்தம் செத்த, சோனிக் கமுகு,

சோனியாவானேன்? அதான் வாழ்க்கைப் போர்!’

பெரு மரம், கபந்தன் தேவையோடு, சிறு மரத்தைச் சுரண்டுகிறது. ஏழைக் கமுகு தன் பங்கை ஒளி, வெளி, காற்று, நீர், அவ்வளவையும்-பறி கொடுத்து நிற்கிறது. வாழ்க்கைப் போர் அது. -

கமுகு நோஞ்சலாகாமல் என்ன செய்யும்? அதற்காக விதியென்று பேசி, செங்குத்தாய் வளருமே? தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ? • அட பிதற்றலே ... ." விதிய்ைப் போற்றில்ை தமஸில் உழலலாம் பிறந்த இடத்தில் வளர்வேனென்ருல் சாவை

~ * - உண்ணலாம். ஆ. கமுகறியும் வளர்ச்சியின் மத்திரம்.