பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3

இவையே சாகா மருந்து. தவித்திடுதல் வேண்டாம் தாண்டி விட்டோம் காலம் என்ருர்கள்.

இருந்த இடத்திலேயே இருந்த ஞானி சொன்குர், "நாளேக் காலையில் உண்மை புரியும் என்று.

மறுநாள் மயக்கம் தெளிந்தது. நாட்கள் ஓடின. வழக்கமான தொல்லைகள், சாவு எல்லாம் இருந்தன. ஜனங்கள் அறிவு புகட்டி அஞ்ஞானம் அகற்றும்படி ஞானியை வேண்டுகிருர்கள். அவர் வாழ்வின் இயல்பு பற்றிப் பேசுகிருர், அது மாந்தருக்குப் பிடிக்கவில்லை. போதைப் பொருள்களே விரும்பி உண்கிருர்கள்.

போதை உண்டால் நினைவு சாகும்: நினைவு போளுல் காலனேது?

இயற்கை தந்த அமைப்புடன், காலத்தைக் கடக்க முடியாது. ஆகவே, இப்பொருள்களால் உதிரத்தை மாற்று வோம். காலப்போக்கில் உதிரம் மாறி, நவமனிதன் தோன்றுவான். நமனழைப்பு நண்ணிடாது. நமலுக்கு அன்று வேலை இல்லை. அழிவை வெல்லும் அமுதம் நிகணப்பை அழிக்கும் அமுதம் தான் என்று பாதை கண்டவன்’ தெளிவு படுத்துகிருன். .

ஞானி உலக இயல்பினை எண்ணிக் கொள்கிருர்.

ஒளி தோன்றச் செய்த அன்று . இருள் தோன்றச் செய்தாய் ஏளுே? உருத் தோன்றச் செய்த அன்று நிழல் தோன்றச் செய்தாய் ஏளுே? உண்மையை அறிவில் நாட்டிப் போலியும் ஏன் சமைத்தாய்? உள்ளத்தில் அமுதம் காட்டி உலகினில் நறவேன் வைத்தாய்? என்று ஈசனே நினைவு கூர்கிருர்.

"அக்னி" என்பது நெருப்பின் இயல்பைக் கூழ் கிறது.