பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

ஆதிகாலத்தில் அரணிக் கட்டைகளின் உதவியால் தி பிறந்தது. அக்கட்டைகளையே தின்று தீர்த்தது.

இடைக்காலத்தில், மனிதர் சிக்கிமுக்கிக் கல் மூலம் நெருப்பை உண்டாக்கினர்கள். தீ மரங்கள், காடுகளை நாசமாக்கியது. - -

நடைக்காலம். தீக்குச்சி, மின்சாரம் தோன்றின. சொன்ன பேச்சைக் கேட்கும் தீ என்று மாந்தர் கருதினர். ஆளுல், தீக்குச்சித் தொழிற்சாலையில் தீ; மின்சாரத் தொழிற்சாலையிலும், தீ. அக்னி பகைவகைவே இருந்தது. அரணி கட்டைகள், தீ, பத்து விரல்கள், மனிதர்; அரணியும் சிக்கிமுக்கியும்-இவற்றின் உரையாடல் போல் இந் நெடுங்கவிதை எழுதப் பட்டுள்ளது. முடிவாக தீ சொல்கிறது

என்னிடமே பகை கொண்டு ஏற்றிவிட முயன்றிட்டாலும் நொடியில் நான் எரிவேன், அனைவேன்: நிமிஷத்தில் சாவேன், பிறப்பேன். வாழ்வென்றெனக் கொன்றில்லே தாழ்வென்று ஏதுமில்லை. இளமையுடன் இருப்பேன் என்றும் எரியும் தொழில் தலே எழுத்து நட்பென்னும் உறவிலுண்டு பகைமையின் போர் விதைகள், கட்டுதிட்டக் கவனத்தோடு காதலித்தால் என்னை நீங்கள், கால் செருப்பாய் சேவை செய்வேன்: குழந்தை போல் சுகமளிப்பேன்; கவனமின்றி, போட்டு விட்டால் பிரளயத் தீ படமெடுப்பேன். இயற்கை என்னும் எங்கள் வம்சம் எளிதென்று எண்ண வேண்டாம், நேசம் வேண்டாம் பகைமை வேண்டாம். கவனித்தால் சேவை செய்வோம்.

கருத்துக்காகத்தான் இக் கவிதை.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களேயும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல் வாழ்வுக்கான தத்துவ