பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆறு அறிவு படைத்த இந்த மனித இனம்தான், பந்தம், பாசம், சொந்தம், நேசம் உறவு, உயிருக்குள் உறவு என்று கண்டபடி பேசி, கலக்கத்தோடு வாழ்ந்து தொலைக்கின்றார்கள்.

பிள்ளைகளைப் பெற்றோம் பிரியமுடன் வளர்த்தோம். தேவையானதை தேடித் தந்தோம். கூடிப் பேசிக் கொண்டாடினோம். கொடுத்து மகிழ்ந்தோம். எடுத்து இன்பம் அடைந்தோம். இப்படி இருப்பதை விட்டு விட்டு, அவர்களையே தாங்குகின்றோம். நாம் இல்லாவிடில் அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்வார்கள்? என்ன ஆவார்கள் என்று ஏங்குகின்றோம்! வீங்குகின்றோம். வெடித்துப் போகின்றோம். துடித்துப் போகின்றோம். துவண்டு போகின்றோம்.

ஏன்? எதற்காக?

இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் வரவில்லை. வளரவில்லை. வாழவில்லை. தாங்கள் வாழ்ந்திட, பிறரை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். முடிந்தால் நேரில் பெறுகின்றார்கள். முடியாவிட்டால் கொள்ளை அடித்துக் கொள்கின்றார்கள்.

பிறர் மேல் பாசம் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். மற்றவர்களும் இந்த விவரம் புரியாமல் மாட்டிக் கொள்கின்றார்கள்.

யாரும் யாரையும் தாங்குவதில்லை. இருக்கும்வரை ஒரு பிணைப்பு. அவ்வளவு தான்.

அன்பே ஆருயிரே! உன்னை விட்டுப் பிரியேன். போய் விட்டால் நான் உயிர் தரியேன் என்று