பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

101


நமது உடலிலே, தோலின் மேற்புறத்திலே உள்ள செல்கள், ஒவ்வொரு நாளும், 1 மில்லியன் அளவுக்கு உதிர்ந்து போக, புதிதாகப் புறப்பட்டு வருகிற தோலின் வெளிப்புற செல்களே தேகத்தைக் கவர்ச்சியாக வைத்திருக்கின்றன.

இப்படி எவ்வளவோ சொல்லலாம். பழையன கழிதல் அவசியம். புதியன புகுதல் அவசரம். இதுதான் தேகத்தின் அதிசயம். இதையே விழுவில கால வகையினானே என்று புறநானூற்றுப் புலவர் பாடி முடிக்கிறார்.

காலத்திற்கு ஏற்ப களங்கமோ, குற்றமோ இல்லாமல், புதிதாகப் படைக்கிற தேகம் தான் நமக்கான தெய்வமாகும். தெய்வம் தொழுவோம். சுகத்துடன் வாழ்வோம்.


107. குடியை ஒழிப்போம் - குடியைக்
காப்போம்

குடி என்றாலே மயக்கம் தருகிற, கள் போன்ற மதுவகைகள் தான் நினைவுக்கு வருகிறது. இது பொது மக்களுக்கு உரிய சிந்தனை.

குடி என்றால் குடிமக்கள் என்பது அரசியல் பேசுவோருக்கு வருகிற எண்ணம். இதை மனதில் வைத்துக் கொண்டுதான், அவ்வைப் பாட்டியும் “வரப்புயர நீருயரும்; நீருயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயரும்” என்று பாடி விட்டாள்.