பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தற்போதைய பழமொழியாக, குடி குடியைக் கெடுக்கும் என்று அரசே, அலங்கார வரிகளில் எழுதி எச்சரிக்கிறது. குடியானது குடும்பத்தைக் கெடுக்கும் என்பதும் கட்டிக் காக்கப்படுகிறது.

குடி என்பதற்கு மது பானம் என்றும், மது உண் என்றும், மனைவி என்றும் பொருள் உண்டு. அதற்கும் மேலே உடம்பு என்றும்; ஊர் என்றும், வீடு என்றும்; அர்த்தம் உண்டு.

குடி குடியைக் கெடுக்கும் என்றால், குடிப்பது உடம்பைக் கெடுக்கும். உடம்பு கெட்டால், உறவுகொள்ளும் மனைவி கெடுவாள். மனைவி கெட்டால், வீடு கெடும். வீகெட்டால் ஊர் கெடும்.

ஊர் என்றால் வாழ்க்கை என்றும், உடம்பு என்றும் செல்வார்கள். குடி என்கிற உடலை குடி என்கிற கருநாகம் தூண்டித் தொலைத்து, தீண்டி அழித்து விடுகிறது.

உடம்பு இல்லாமல், என்ன உலக வாழ்க்கை இருக்கிறது? கொஞ்சம் கொஞ்சமாக உடம்பை அழிப்பதற்குப் பெயர்தான் கெடுப்பது என்பதாகும்.

குடியானது உடம்பு கெடாமல், உயர்கிற போது, நிமிர்கிற போது, பலம் பெறுகிற போது, அந்த உடம்பின் உள்ளே இருக்கும் கோன் ஆகியதெய்வமும், உயர்ந்து நிற்கும். ஆத்மாவாகிய தெய்வம் செழித்து நிற்கும். இல்லையேல், அந்த தெய்வமே குடிப்பவனை நின்று கொல்கிறது.