பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெண் புத்தி ஒருவனின் புத்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே பின்புத்தியாய் இருக்க வேண்டும் என்றனர். பின் என்றால் பின்னால் என்பது ஓர் அர்த்தம். காரணம், பெருமை, பிற்காலம், வழி என்றும் பல அர்த்தங்கள் உண்டு.

பெண் புத்தி பின் புத்தி என்கிறபோது பெண் ஒன்றை நினைக்கும் போதே குலப்பெருமையைப் பற்றிச் சிந்திக்கிறாள். இப்படிச் சிந்தித்துப் பேசுகிற புத்திதான் பின்புத்தி.

இப்படிச் சிந்திக்காமல் பேசுகிற அடாவடிப் பெண்களும் இருக்கிறார்களே என்றால் அவர்களுக்கு அரித்துத் தொலைக்கும் பேன் புத்தி, ஆட்டி அலைக்கழிக்கும் பேய்புத்தி, கடித்துக் குதறும் நாய் புத்தி என்றும் கூறலாமல்லவா!

நல்ல பழமொழியை நாம்தான் மாற்றிப் பேசி மயங்கிக் கொண்டிருக்கிறோம்.


109. பாவத்தின் சம்பளம் மரணம்

மதவாதிகள் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் விரித்துரைக்கிற வேதாந்த விளக்கமே வேறு.

நலவாதிகள் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் நயத்துரைக்கிற சித்தாந்த விளக்கமே வேறு.

மிதவாதிகள் பாவத்திற்குத் தீவினைப் பயன் தீச்செயல், பங்கம், பாதகம் என்றெல்லாம் பேசுவார்கள்.

பாவம் என்கிறதீவினையை பிறருக்குச் செய்யலாம். பிறருக்காகச் செய்யலாம். அப்படிச் செய்கிறபோது மன