பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


என்றால் கூலி, இன்னொரு அர்த்தம் எல்லை, முடிவு, ஆகவே தேகத்தை அழிக்கும் தீய செயல்களுக்கு முடிவுதான் அந்தத் தீராத ரணம். அதுவே மரணமாகும்.


110. மதியும் விதியும்

விதி வலியது. மதி எளியது என்பதாக எல்லோருமே பேசினார்கள். பேசுகின்றார்கள். இனியும் பேசுவார்கள்.

விதியை வெல்லவும் முடியாது. தள்ளவும் முடியாது. அதன் வழி என்னவென்று சொல்லவும் முடியாது என்பதுதான் உண்மையான வாசகம் என்று உறுதியாகப் பேசப்படுவதும் உண்மைதான்.

மதி என்றால் என்ன? விதி என்றால் என்ன? ஒருவருடைய விதி எப்படி அமைகிறது? ஒருவருடைய விதி எவ்வாறு வேலை செய்கிறது.

இந்தக் கேள்விகளைக் கேட்பவருக்கு விவரமும் இல்லை. பதில் சொல்பவர்களுக்கு விளக்கமும் போதாது. இந்தக் கேள்வியும் பதிலும் மாமாங்கமாக கேட்கப்பட்டுத் தான் வந்திருக்கின்றன.

ஏற்படுகின்ற இழப்பையும், ஏற்படுத்துகின்ற இன்பத்தையும், தன் மனத்திருப்திக்காக ஏற்றுக் கொள்ளச் செய்ய இந்த விதி உதவுகிறது.

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் இது மதத்தின் செல்லக் குழந்தையின் மழலை என்றும் கூறிவிடலாம். கடவுள்மேல் பாரத்தையும் போட்டு விட்டு கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்கிற காரணமற்ற சமாதானம்தான் இந்த வார்த்தை.