பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

107


ஒருவன் விதிவசத்தால் கஷ்டப்படுகிறான் என்றால் அவன் தனது மதி நலத்தால் மோசம் போய்விட்டான் என்பதுதான் அர்த்தம்.

மதி என்பது சிந்தனை. விதி என்பது விளைவு.

ஒருவன் சிந்தனை எப்படி இருக்கிறதோ அதுபோல் தான் அவன் செயலும் அமையும், நல்லது நினைத்தால் நல்லதும், தீயதை சிந்தித்தால் தீயதும் நடக்கும்.

தீயதையே சிந்தித்து நடந்து விட்டு நல்லது கிடைக்கவில்லை என்றால் எட்டிக்காயிலே போய் இனிப்பை எதிர்பார்ப்பது போலத் தானே! விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்திக்காமல் விஷமமாக சிந்திப்பவர்களுக்குத் தான் விதி விபரீதமாக வேலை செய்கிறது. விதியை நொந்து கொள்வது சரியில்லை. மதியை அறிவோடு சிந்தித்தாலே போதும். சங்கடங்கள் வராது. சம்பவங்களும் சுவையாக இருக்கும். சுகமாக நடக்கும்.


111. பணியும் பிணியும்

பணி என்றால் வேலை என்றும், பிணி என்றால் நோய் என்றுதான் பொதுவாகப் பொருள் சொல்வார்கள்.

பணிவாக இருப்பதற்கும் பணிதான். ஈகையோடு இருப்பதும் பணிதான். பாந்தமாகத்தொண்டு செய்வதும் பணிதான். உற்றாருக்கும் ஊருக்கும் ஊழியம் செய்வதும் பணிதான். மற்றவர்களையும் மனிதராக மதித்து வணங்குவதும், தொழுவதும் பணிதான்.

பண் என்றால் இசை, இ என்றால் ஆச்சரியம். ஆக, பணி என்றால் ஓர் ஆச்சரியமான அதிசயமான