பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆனால் நமது உடம்பைக் குறிக்கக் கூடிய ஒரு உன்னதமான சொல் அது என்றால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறதல்லவா!

நமது உடலை முப்பரிமாணம் கொண்டதாகக் கூறுவார்கள். உடல் , மனம் , ஆத்மா என்று பிரிப்பார்கள்.

உறுப்புக்களின் தளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் நடைபெறுகிற ஒரு போராட்டம் நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கும் நலத்திற்கும் இடையே நடைபெறுகிற போராட்டம். உடலிலே நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் போர்க்களமாக அதாவது அமர்+களமாக விளங்குவது நமது உடல்தான்.

மனதிலே ஏற்படுகின்ற நல்லெண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம். மனச்சாட்சிக்கும் மனச் சூழ்ச்சிக்கும் நடக்கும் யுத்தமே எப்போதும் அமர்க்களமாக விளங்குகிறது.

ஆத்மாவின் நிறைவுக்கும் குறைவுக்கும் இடையே ஏற்படுகின்ற ஆரவாரம். இப்படி எல்லா நிலைகளிலும் உள்ளுக்குள்ளே யுத்தகளமாக விளங்கும் உடலானது, வெளி உலகத்தோடும் வீறு கொண்டு மாறுபட்டும் மோதிக் கொண்டுதான் வாழ்கிறது.

ஆக, அமர்க்களமாக வாழ்வை நடத்துகிற ஒரு பின்னணியில், அமர் களமாக விளங்கும் நமது உடம்பானது அற்புதமான படைப்பு என்பதில் ஐயமில்லையல்லவா!