பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உள்ளங்கையைப் பார்க்கிறபோது, உள்ளத்தின் ஒழுக்கம் தென்படுகிறது. அந்த ஒழுக்கம் எப்படிப்பட்ட தாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உள்ளங்கையில் இரேகைகள் வரையப்பட்டிருக்கின்றன.

இரேகை என்பதற்கு, எழுத்து, சித்திரம், வரி என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

எதைப் பற்றிய எழுத்து? எதைப் பற்றிய வரிகள்? எதைப் பற்றிய சித்திரங்கள் என்றால் ஒழுக்கம் பற்றிய குறிப்புக்கள்.

ஒழுக்கம் எப்படிப் பட்டதாக அமைய வேண்டும் என்றால், இயற்கையைப் போல என்பது தான் சுவாரசியமான கருத்தாகும்.

இயல்+கை தான் இயற்கை ஆயிற்று.

இயல் என்றாலும் ஒழுக்கம்; கை என்றாலும் ஒழுக்கம்.

இயற்கையைப் போல ஒழுக்கமாக நடவுங்கள் என்பதற்காக தான் இரேகைகள் இருக்கின்றன.

உள்ளங்கையில் எங்கே இருக்கிறது இயற்கை என்ற ஒரு கேள்வி எழுவதும் இயற்கைதான்.

ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் இருக்கிறதல்லவா! அவைதான், இயற்கையின் கூறுகளை நினைவுபடுத்துகின்றன.

1. கட்டை விரல் - தீ
2. ஆட்காட்டி விரல் - காற்று
3. நடுவிரல் - ஆகாயம்