பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இதை அறிந்தே செய்கிற காரியமாகத்தான், எல்லா மதங்களும், ஒரு புனித வேலையை செய்திட ஆணையிட்டிருக்கின்றன.

கையில் மணிமாலை, உத்ராட்சமாலை போன்ற வற்றைக் கொண்டு, ஜெபிக்க வேண்டும் என்பதாகச் செய்திருக்கிறது.

ஒவ்வொரு மணியிலும் கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் பதிந்து பதிந்து உருட்டுகிற போது, ஏற்படுகிற உராய்வுகள் தாம், மனதை சாந்தப் படுத்தி, ஒரு நிலைப்படுத்தி, ஒரு மகோன்னத நிலையில் வீற்றிருக்க வைக்கிறது.

ஆகவே, மதத்தின் வழி பார்த்தாலும், மனது வழிப் பார்த்தாலும், நம்பிக்கை வழி பார்த்தாலும், தூங்கி விழித்ததும், உள்ளங்கையைப் பார்ப்பதானது, ஒருவரை உன்னத வாழ்வுக்கு வழி நடத்துகிற காரியம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

உள்ளம் எல்லாமாக இருப்பதால், ஒழுக்கம் விழுப்பம் தருவதால், உள்ளங்கைக் காட்சி உயர்வைத் தருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல, தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.


116. மலரும் மனைவியும்

வாழ்க்கையை மகிழ் விக்க வருபவளைத் தான் துணைவி என்கிறார்கள். மனையில் வாழ வந்ததால்தான் மனைவி என்கிறார்கள். மனைவி என்று கூறுகிறோமே அதற்குப் பொருள் தெரியுமா?