பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. மயமும் சமயமும்

வாழ்க்கைக்கு ஒரு சிறப்பு உண்டு. அதற்கு ஒரு லயம் உண்டு. மனிதர் சொல்லுகிற சொல்லுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதற்கு நயம் என்று பெயர்.

வாழ்க்கைக்கும் மனிதருக்கும் ஒரு அழகு உண்டு. அதற்கு மயம் என்று பெயர். மயம் என்றால் அழகு என்று பொருள். அழகு என்பதற்கு செழுமை, தகைமை, மாண்பு என்றும் சொல்லலாம். அதற்கும் மேலே அழகு என்பதற்கு-சுகம் என்று ஒரு அர்த்தம் உண்டு.

உடலுக்கும், உள்ளத்துக்கும், அழகையும் சுகத்தையும் கொடுக்கும் அற்புத அமைப்புதான் சமயம் என்பதாகும்.

சமயம் என்பது சாதாரணச் சொல்லல்ல.

சக்தி வாய்ந்த சித்தான, சத்தானச் சொல்.

ச என்றால் கூட, (அதிகமான) மயம் என்றால் அழகு

அழகுக்கூடிட ஆவன செய்யும் அரும்பாதைதான் சமயம். சமயவாதி என்றால் சந்தோஷத்தை சகலருக்கும் தருபவன். மன அமைதியை, மனோகர மகிழ்ச்சியை அளிப்பவர் என்று அர்த்தம்.

ஆனால் இப்போது சமயவாதிகள், அரசியல்வாதிகளை நல்லவர் என்று நினைக்கும் வண்ணம் செயல்படுவதுதான் வேதனையை அளிக்கிறது.