பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


117. மனித உடலும் மண்குடமும்

வாழ்க்கையை ஒரு மண்குடத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள். அந்த மண்குடத்தில் நிறைய தண்ணிர் இருக்கிறது. அது ஓட்டையில்லாத குடம் என்றாலும். நீர் கசிந்து கசிந்து வெளியேற நீர் அளவில் குறைந்து கொண்டே வருகிறது.

நாளாக நாளாக நீர் குறையும். ஒருநாள் குடம் வெறுங்குடமாக வீற்றிருக்கும். உடல் ஒரு மட்குடம் என்றால் உடலில் உள்ள சக்தி என்பது நீராக இருக்கிறது.

நம்மை அறியாமலேயே நீர் கசிவதுபோல, சக்தி செலவாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதை உணர்ந்து சிக்கனமாக சக்தியை, பலத்தை செலவழித்தால் நீண்ட நாள் நிம்மதியாக நலமாக வாழ முடியும். இருக்கிறதே என்று இறைத்து விட்டால் எல்லாம் பாழாகும்.

ஒரு சொட்டு விந்தின் துளியானது 72 சொட்டு இரத்தத்தால் உருவாக்கப்படுகிறது என்பர் விஞ்ஞானிகள். ஒருமுறை விந்து வெளியாகும் பொழுது, ஒரு தேக்கரண்டி அளவு வெளியேறுகிறது. அதற்கு எவ்வளவு இரத்தம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டால் உண்மை புரியும். மேலும் அந்த உயிர்சத்தான் விந்தினை வெளியேற்ற உடலை முறுக்கி, இயக்கி சூடேற்றித்தானே காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது.

ஒரு துணியை அடிக்கடி உடுத்தி, அடித்து முறுக்கி, கசக்கிப் பிழிந்து கொண்டே இருந்தால் துணி