பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

119


என்னவாகும்? சீக்கிரம் நூலிழைகள் நைந்து போக துணி கிழிந்து போகாதோ?

அது போலவே உடல் என்பது திசுக்களாலும் நரம்புகளாலும் ஆனது. நரம்புகளும் திசுக்களும் நாளுக்கு நாள் முறுக்கப்பட்டு கசக்கப்பட்டால் என்ன ஆகும்? நலிந்து போகாதா?

இதனால்தான் நம் முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறை என்பது கரும்பு வாரத்திற்கு இருமுறை என்பது வரம்பு. தினம் தினம் என்பது குறும்பு என்றனர்.

குறும்பு நலிவுக்குக் கொண்டு சென்று ஆளை நசுக்கியே விடும் என்பதால் ஆண் பெண் இருவரும் அறிவுள்ளோராக நடந்து கொள்வதே நலமாகும்.


118. புத்திரபாசம்

புத்திர பாசம் பொல்லாதது என்பது பழமொழி. புத்திரர்கள் மேல் பெற்றோர் வைத்திருக்கும் பாசம் பொல்லாததா? அந்த புத்திரர்கள் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்கிற மோசம் பொல்லாததா?

புத்திரர்கள் காட்டுகின்ற வேஷமும், செய்கின்ற மோசமும் தான் பொல்லாதது என்பதுதான் நடைமுறை வாழ்க்கை, கண்மூடித் தனமாக பாசம் கொள்வதும் பாவம் குழந்தைகள், என்று பரிதாபப்பட்டு பரிகாசத்திற்கு ஆளாவதும், நாளை நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நாசமாய் போவதுதான் நேற்றைய பெற்றோர்கள் முதல் இன்றைய பெற்றோர்களாக இருப்பவர்களின் பாவ நிலை.