பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெத்தமனம் பித்து என்று பீற்றிக் கொண்டு கேவலப்படுபவர்களுக்கு, கற்றோர்களாக உள்ள பெற்றோர்களும் விதி விலக்கல்ல.

குருவிகள் தங்கள் குஞ்சுகளுக்கு சிறகு முளைத்ததும், கூட்டை விட்டு அனுப்பி விடுவதால் தான் சந்தோஷமாகப் பறக்கின்றன.

பால் குடியை நிறுத்தியதும், மிருகங்கள் தங்கள் குட்டிகளை, கன்றுகளை ஒதுக்கி விடுகின்றனவே! அவைகள் என்ன கெட்டா விட்டன?

புத்திரபாசம் என்று வேஷத்தில் மயங்கி மோசம் போகிறவர்கள் எல்லோருமே தாங்கள் பெற்ற புத்திரர்களால் நாசம் ஆனவர்களே!

எதற்காகப் பெற்றோம்? எதிர்பார்த்தா பெற்றோம்? என்று புரியாமல் தெரியாமல் காப்பாற்றுகிற காரியத்தில் வாழ்கிற பெற்றோர்கள் ஒன்றும் புரியாமலேயே தங்கள் வாழ்க்கையை கஷ்டப்பட்டு முடித்துக் கொள்கிறாாகள்.

அதுதான் புத்திரபாசம் விளைவிக்கும் நாசம்.


119. தமிழ் என்றால் என்ன?

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று அர்த்தம். ஒளி, ஒலி, அழகு கூடிய நீர்மை என்று அர்த்தம்.

பொதுவாக தமிழ் என்றதும், அது ஒரு மொழி - தமிழர் பேசுகின்ற மொழி என்றுதான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் போதுதான் தமிழின் மகத்துவம் நமக்குப் புரிகிறது. தெரிகிறது.