பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

121


தமி+ழ் என்று பிரிக்கிறோம். தமி என்ற சொல்லுக்கு தனிமை, ஏகம், ஒப்பின்மை என்று பல பொருட்கள் உண்டு.

‘ழ்’ என்ற எழுத்து - தமிழுக்கே உரிய எழுத்து. அந்த எழுத்தைக் கொண்டுதான் அதன் சிறப்பைக் கொண்டுதான் தமிழ் என்றே பெயர் வந்திருக்கிறது.

தமி என்றால் ஒப்பின்மை என்று கூறினோம். ஒப்பின்மை என்றால் ஆங்கிலத்தில் Unequal, Matchles என்று அர்த்தம். தமிழ் என்ற மொழிக்கு எந்த மொழியும் இதற்கு ஒப்பாகாது என்பதால்தான் தமி+ழ் என்ற, ழ் என்பதை இறுதியாக வைத்து, பெருமையாகக் கூறினார்கள்.

தமி என்பதற்கு ஏகம் என்று பெயர். ஏகம் என்றால் Absoluteness, Independence கூறுவார்கள். ழ் என்பதை இறுதியாக வைத்து பெருமையாகக் கூறினார்கள்.

ழ் என்ற சிறப்பெழுத்தை உடைய தமிழானது முழுமையான ஒரு மொழி. அதனால் தமித்தே இயங்க முடியும் என்பதைக் குறிக்கவே ஏகம் என்றனர்.

இப்படிப்பட்ட தமிழ் இப்போது எப்படி ஆயிற்று பார்த்தீர்களா!


120. ஆசைகள் ஐந்து

மனிதனுக்கு மலையளவு ஆசைகள் உண்டு என்பார்கள். ஆசையில்லாத மனம் யாரிடம் இருக்கிறது?