பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடலில் அலைகள் எழுவதுபோல, மனதில் ஆசைகள் எழுவது நிற்பதில்லை. அவற்றை நாம் 5 வகையாகப் பிரிக்கலாம்.

1. வட்டில் ஆசை: தட்டிலே குவித்துக் கொண்டு தின்னுகிற தணியாத ஆசை.

2. கட்டில் ஆசை: உண்ட உடம்பில் ஊறுகிற தினவுகளை தீர்த்துக் கொள்கிற அடங்காத ஆசை.

3. தொட்டில் ஆசை: தன்னால் இது ஒன்றே இயலும் என்ற திருப்தியில் உயிர்களை உற்பத்தி செய்வதும்; விட்டு வந்ததே வாரிசு என்று கொண்டாடி மகிழ்வதும் பிறகு அதையே, மறந்து விடுகிற ஆசை.

4. கொட்டில் ஆசை: உண்ண, ஒதுங்க, உறங்க உதவுகிற வீட்டு மேல் உள்ள ஆசை.

இந்த நான்கு ஆசைகளும் அளவோடு இருக்கும் வரை ஆனந்தமாக வாழ்கிற சூழ்நிலை அமையும். பிறப்பின் பயன் புரியும். வாழ்கிற வாழ்வின் மேன்மையும் தெரியும்.

5. மட்டில் ஆசை: நான்கு ஆசைகளும் மீறிப் போகிறபோது, பேராசை ஏற்படுகிறபோது, அது மட்டி ஆசையாகிறது. அதாவது ஒழுங்கு மாறிப் போகிறது.

மட்டிலா ஆசைகள் கொள்கிறபோது, அவன் மட்டி ஆகிறான். அதாவது மடையன் ஆகிறான். கடையன் ஆகிறான்.

மக்கள் தங்களது ஆசைகளால், மட்டிலா ஆசைகளால், மட்டியாகி விடுகிறார்கள், கவலைகளின்