பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

123


பட்டியாகி, குமுறல்களின் தொட்டியாகி, உடைந்து போன சட்டியாகி அழிகின்றார்கள். இதுதான் மனித மாண்பின் மரியாதை கெட்ட மகத்துவமாக தொடர்ந்து வருகிறது.


121. ஊனமும் ஈனமும்

பணத்தால் ஒருவர் உயர உயர பண்பும் அன்பும் பறந்து போய் விடுகிறது.

முரட்டுத்தனமான தெம்பும் தைரியமும் அதிகமாகி விடுகிறது.

உணவிலும் உடையிலும் ஊதாரித்தனம் பெருகி விடுகிறது.

பேச்சிலும் ஏச்சிலும் கர்வம் கொடிகட்டிப் பறக்கிறது. கண்ணை மறைக்கிறது.

மனித நேயத்திலும், உறவின் தாயத்திலும் விரிசல் பள்ளத்தாக்கு பாதாளமாகி விடுகிறது.

அன்றாடம் அவரிடம் நின்றாடும் காரியம் எல்லாம், ஆணவத்தின் வீரியத்தால் அவரை அழித்தொழித்து விடுகிறது.

குறுகிய காலத்திலே அவர் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு குற்றுயிராய் கிடப்பதுபோல, நோய்களின் புற்றாக மாறிப் போகிறார். நாறிச் சாகிறார்.

ஆமாம். அவர் உடலில் ஊனமும், மனதில் ஈனமும் கொண்டு, மனித வடிவாய் வலம் வருகிறார். ஆனால் மனித சடமாக அல்லவா தரிசனம் தருகிறார்?

என்னே அவரது ஈனத்தனமான ஊன வாழ்க்கை!