பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

11


3. தூய்மையும் வாய்மையும்

தூய்மை என்பது சுத்தம் பரிசுத்தம் எனலாம். உடலுக்கு மட்டுமல்ல இது மனதுக்கும் பொருந்தும். தூய்+ மெய் என்பது தான் தூய்மையாக மாறிவிட்டது. தூய் என்றால் தூவுதல் என்று அர்த்தம்.

மெய்யான உடலுக்குச் சுகத்தைத் தூவுவதுதான் தூய்மை. உடலுக்கு சுகம் என்பது உடல் வலிமையைக் குறிக்கும்.

ஆகவே, தூய்மை உடலுக்கு வலிமையைத் தருகிறது. வலிமையான உடலிலிருந்து தெளிவான, பொலிவான வார்த்தையே பிறக்கும்.

அதைத்தான் வாய்மை என்றனர்.

வாய் + மெய் = வாய்மை. வாய் என்றால் வழி. உடலின் வழியாக, மொழியாக உண்மை வெளிவரும். தூய்மை இழந்தவர்களிடம் வாய்மையை எதிர்பார்க்க முடியாது.

உடலுக்குத் தூய்மை தருகின்ற ஒழுக்கங்களைப் பழகிக் கொள்வது உங்களை உயர்ந்தோராக்கும்.

உலகுக்காக வாழ வேண்டாம். உங்களுக்காக வாழுங்கள். அதுதான் ஆத்ம திருப்தியாகும்.


4. அறம் பொருள் இன்பம்

அறம் செய்யப் பொருளைத் தேடுங்கள். இன்பம், வீடு எல்லாமே கிடைக்கும் என்பது இதுவரை கூறி வந்த பொருளாகும்.