பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

131


சந்தர்ப்பம் கிடைக்கிறபோது ஒரு சிலரை சாமி என்கிறோம். வேறு சிலரை ஆசாமி என்கிறோம். இந்த சாமியும் ஆசாமியும் என்னும் இரண்டு சொற்களுமே எல்லோரையும் குழப்பி விடுகின்றன.

கலர் உடைகளைக் களைந்து விட்டு, காவி உடைகளுக்குள் புகுந்து கொள்கிறகாலிப் பயல்களையும், காமப் பேய்களையும் இன்னும் நாம் சாமி என்று, ஏத்தி போற்றி மதித்து துதித்து, இணங்கி, வணங்கி, விழுந்து எழுந்து, பணத்தை இறைத்து பாவத்தைப் போக்கிக் கொள்ள பகீரதம் பிரயத்தனம் செய்கிறோம்.

நம்மை ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும் நினைத்துக் கொண்டு நினைத்ததை சாதித்துக் கொண்டு, கண்டதையும் போதித்துக் கொண்டு, காலந் தள்ளுகிறவர்களை சாமி என்று அழைக்கும் போது, உண்மையான சாமி என்ன ஆயிற்று?


ஏன் ஆசாமி என்கிறார்கள்? சாமி என்கிறார்கள்?

கோயிலைக் கட்டி வைத்து, அதற்குள் சிலையை வடித்து வைத்து, தீபத்தை ஏற்றிக் காட்டி, பாபத்தைப் போக்குவதற்காக படையலைப் படைக்கிறோம். சாமி மெளனமாக ஏற்றுக் கொள்கிறது.

பட்டுத் துணிகளை உடுத்துகிறோம் சாமி மெளனமாக உடுத்திக் கொள்கிறது.

பளபளக்கும் நகைகளைப் பூட்டுகிறோம். சாமி மெளனமாக போட்டுக் கொள்கிறது. எதைத் தந்தாலும்,