பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஏற்றுக் கொள்கிறது. ஏமாற்றினாலும் பொறுத்துக் கொள்கிறது. மனிதர்கள் செய்யும் மகா கொடுமைகளையும் தில்லுமுல்லுகளையும், சிணுங்காமல், சபிக்காமல் சகித்துக் கொள்கிறது. அதனால்தான் அந்த (தெய்வச்) சிலையை நாம் சாமி என்கிறோம்.

அதேபோல் மனிதர்களுக்குச் செய்து பாருங்கள்?

சுவையான சோற்றைக் காட்டுங்கள் ஆ என்று வாயைப் பிளக்கிறான்.

அழகான துணிமணிகளைக் காட்டுங்கள். ஆஎன்று விழிகளைப் பிதுக்குகிறான்.

அணிமணிகள், ஆபரணங்களை எடுத்துக் காட்டுங்கள். என்று ஓங்காரம் போடுகிறான்.

எதைப் பார்த்தாலும் ஏக்கப்பட்டு, எடுத்துக் கொள்ள வேண்டும். சுருட்டிக் கொள்ள வேண்டும் என்று வென வாய் பிளந்து அலைகிறானே, அப்படி ‘ஆ ஆ’ என்று அலைவதால்தான் அவனை ஆசாமி என்கிறோம்.

அவனை எப்படி அழைத்தாலும் வருந்தவும் மாட்டான். திருந்தவும் மாட்டான். அகப்பட்டதை அடித்துக் கொண்டு போக வேண்டும் என்பவனை எப்படி அழைத்தால் என்ன.

"Call me Ass. Give me Cash"

இதுதான் இன்றைய வாழ்க்கைச் சித்தாந்தம்.