பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

133


127. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

வானமும், பூமியும், நீரும், காற்றும், நெருப்பும் சேர்ந்ததுதான் இயற்கை

அதுபோலவே, மனித உடலும் செயல் ஒழுக்கத்தால், இயற்கை போன்ற அமைப்புடன் செயற்கை எனப் பெயர் பெற்றிருக்கிறது. (கை என்றால் ஒழுக்கம். செயல் என்றால் செய்கை)

மனித உடலும் நீர், காற்று, நெருப்பு முதலியவற்றால் தான் நிரவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இயற்கையொடுதான் மனித உடலும் எப்போதும் இயைந்தே, இசைந்தே, இணைந்தேதான் செயல்பட வேண்டும் என்ற நிய்தியைக் கொண்டிருப்பதால்தான்.

மனித உடலில் வெப்பம் அதிகமாகி, சூடு ஏறிவிட்டால் காய்ச்சல் வருகிறது. வெப்பம் குறைந்து போனால் ஜன்னி வந்து விடுகிறது.

மனித உடலில் நீர் அதிகமாகிப் போனால், ஊதிப் போகிறது. குறைந்து போனால் வற்றி விடுகிறது.

மனித உடலில் காற்று அதாவது உயிர்க்காற்றைத் தவிர, வேண்டாத காற்று நிறைந்து போனால் வாதம் வந்து விடுகிறது.

ஆக உடம்பிற்குள் பித்தம், வாதம், சிலேத்துமம் என்ற மூன்று வியாதிகளும், மறைந்திருந்து தாக்கும் பகைவர்கள் போல, தருணம் பார்த்து காத்துக் கிடக்கின்றன.