பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆக, ஒரு மனிதன், தன் ஊரில் இருந்தாலும், அல்லது அவன் வேறொரு ஊருக்கு அல்ல அன்னிய தேசத்திற்குப் போனாலும், முதலில் கூறிய இந்த மூன்றிலும் கவனம் செலுத்திக் கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற அறிவுரையைத்தான், திரவியம் தேடு என்று சொல்கிறது.

திரவியம் என்றால் பொன் பொருள், காசு, பணம், சொத்து என்றுதான் எல்லோருக்கும் எண்ணத் தோன்றுகிறது. எண்ணத் தூண்டுகிறது. ஆனால், திரவியம் என்ற சொல்லின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ளாமல், வீணாகிப் போகின்றார்களே மக்கள் என்பதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.

திரவியம் என்றால், பூமி, வானம், தண்ணிர், காற்று, நெருப்பு, காலம், திசை, ஆன்மா, மனம் என்று அர்த்தம்.

ஒருவர் தான் வாழ்கிற ஊரில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அவரது தேகம் நலிவில்லாமல் சுகமாக ஏற்றுக் கொண்டிருக்கும். வெளியூருக்குப் போகும் பொழுது, தனது ஊர் இயற்கை நிலை, தட்ப வெப்ப நிலை, காற்று நிலை, அந்த நேரத்துக் காலநிலை, தனது சுவாசநிலை, மனநிலை இவற்றை யெல்லாம் சரிபார்த்து. அனுசரித்து இயங்குகிறபோது தான், சுகம் கிடைக்கும் இல்லையேல், எதிர்பார்த்துச் சென்ற காரியம் இடர்ப்படும். உடலும் துயர்ப்படும். மனமும் சலனப்படும்.